இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியிடம் பரிந்துரைத்திருந்தார்.
நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பான கடிதம் ஒன்றை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அனுப்பியிருந்தார்.
அதை ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, எதிர்வரும் 4 ஆம் திகதிமுதல் நடைமுறையாகும் வகையில் 6 ஆண்டுகளுக்கு நந்தலால் வீரசிங்கவின் பதவிக் காலத்தை நீடித்துள்ளார்.
Discussion about this post