மதுபானங்களின் விலை குறைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி (M.J.Gunasiri) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில், ஊடகமொன்று வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மதுவரி திணைக்களம் கோரிக்கை
அதிவிஷேச வகை மதுபானத்தின் விலையைக் குறைக்குமாறு மதுவரி திணைக்களம் (Excise Department of Sri Lanka) விடுத்த கோரிக்கையை மது உற்பத்தி நிறுவனங்கள் நிராகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, மதுபானத்தின் விலை தற்போது எந்த வகையிலும் குறைக்கப்பட மாட்டாது என மதுவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post