நாட்டில் மது விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாக இலங்கை மதுவரி திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் இரண்டு பிரதான உள்ளூர் மதுபான உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை பெரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம், மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமை ஆகும்.
இக் காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானங்கள் விற்பனை அதிகரிக்கலாம் என்பதால், சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த மதுவரி திணைக்களம் அதிகாரிகளை நியமித்து நாடு தழுவிய அளவில் சோதனைகளை முன்னெடுத்து வருகிறது.
இதேவேளை, மது விற்பனை குறைந்துள்ளமையால் அரசுக்கான வரி வருமானத்தில் தாக்கத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post