முன்னாள் அரசாங்கத்தின் காலத்தில் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாட்டின் பல பகுதிகளில் மதுபானநிலையங்கள் திடீர் என அதிகரித்துள்ளமை குறித்த சர்ச்சை காணப்படும் நிலையில் இந்த விடயத்தில் வெளிப்படை தன்மை காணப்படவேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தேர்தலிற்கு முன்னர் பகிரங்கப்படுத்தவேண்டும்அதன்படி மதுபானசாலைகளை திறப்பதற்கு பரிந்துரை செய்த நபர்களின் பெயர்விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் என சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாடாளவிய ரீதியில் மதுபானசாலைகள் குறித்த பரந்துபட்ட விவகாரம் காணப்படுகின்றது ,இவற்றிற்கு அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பரிந்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல்வாதிகள் யார் என்பது மக்களிற்கு தெரியவேண்டும் .
எதிர்வரும் தேர்தலிற்கு முன்னர் இதனை பகிரங்கப்படுத்தவேண்டும், இதன் மூலம் இந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ளவர்கள் பதவியிலிருந்து அகற்றப்படுவதை உறுதி செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மதுபானசாலைகள் அதிகரிப்பு என்பது சமூக பிரச்சினை ,இது இளம்தலைமுறையினருக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்,மதுபானசாலைகளை விஸ்தரிப்பதில் நேரடியாக தொடர்புபட்ட அரசியல்வாதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தவேண்டும் எனவும் சுமத்திரின் கூறியுள்ளார்.
Discussion about this post