மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத்தில் நிவாரணம் வழங்கப்படவுள்ளது என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் இந்த அறிவிப்பை அடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மத வழிபாட்டுத் தலங்களில் முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன.
மாதாந்தம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்படும் மத வழிபாட்டுத் தலங்கள் பிரத்தியேகப் பிரிவின் கீழ் கொண்டுவரப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Discussion about this post