மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழைபெய்து வருவதன் காரணமாக நீர்நிலைகளிலிருந்து முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் வருவதன் காரணமாக மக்கள மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது.
மட்டக்களப்பில் தொடர் மழை காரணமாக சிறிய குளங்கள் நிரம்பி வழியும் நிலை காணப்படுவதன் ஆறுகள் வாவிகள் பெருக்கெடுத்து வருகின்றது.
இந்நிலையில் குளங்கள், வாவிகள், ஆறுகளிலிருந்து பெருக்கெடுத்தோடும் வெள்ளத்துடன் முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்கு வருகின்றன.
அதோடு வெளியே வரும் முதலைகள் கால்நடைகளைகளையும் பிடித்துச்செல்லும் நிலைமையும் காணப்படுகின்றது. அதன்படி மட்டக்களப்பு கூழாவடி பகுதியில் அதிகளவான மக்கள் வாழும் பகுதிக்குள் இன்று (11) காலை முதலையொன்று புகுந்ததனால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்ததாக் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதலையினை கொண்டு செல்லும் நடவடிக்கையினை அதிகாரிகள் முன்னெடுத்தனர்.
இதேபோன்று நேற்று (10) மாலை திருப்பழுகாமம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மாடு ஒன்றை பிடித்துச்சென்றதாக பிரதேச மக்கள் தெரிவிப்பதுடன், அப் பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து குளங்கள், வாவிகள், ஆறுகள், நீர்நிலைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post