வாகனேரி பகுதியில் யானையின் திடீர் தாக்குதலில் சிக்கி மீன் வியாபாரி படுகாயமடைந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி – மீராவோடை நூராணியா வீதியைச் சேர்ந்த 52 வயதுடைய மீன் வியாபாரி இவ்வாறு யானை
தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
நேற்றைய தினம் (03-01-2024) காலை, மீன் வியாபாரத்துக்கு செல்லும் போதே இவ்வாறு யானை தாக்கியதாக
தெரியவந்துள்ளது.
மேலும், யானை தாக்குதலுக்குள்ளான மீன் வியாபாரி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
நாட்டில் சமீபக் காலமாக யானையின் தாக்குதலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகிவரும் நிலையில்
இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post