மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தலைவி அ. அமலநாயகி மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை பொலிஸார் தாக்கியது மட்டுமன்றி அவ்விடத்திலிருந்து இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இதனூடாக சிங்கள பௌத்த இனவாத அரசின் கோர முகம் வெளிப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்ததுடன் உடனடியாக சர்வதேசம் தலையிட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
பெருமளவான மக்களின் பங்களிப்புடன் போராட்டம் ஆரம்பமாகிய நிலையில் பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸாரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்ட நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்
இதேவேளை மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைத் தருவதனை முன்னிட்டு இவர்கள் ஜனாதிபதி பயணிக்கும் வீதியில் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post