உண்ணா நோன்பிருந்து தியாக மரணத்தைத் தழுவிக்கொண்ட திலீபனின் உருவப்படத்தைத் தாங்கிய ஊர்தி மீதான தாக்குதல் முயற்சியொன்று மட்டக்களப்பு மொறக்கொட்டாஞ்சேனையில் வைத்து மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.
அதேபோன்ற முயற்சியொன்று மட்டக்களப்பு நாவலடிச் சந்தியில் வைத்தும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவருகின்றது.
இலங்கை புலனாய்வாளர்களுடன் இணைந்து, இலங்கை புலனாய்வுப் பிரிவின் ஊதியத்தில் செயற்பட்டுவருகின்ற ‘பிள்ளையான் குழு’ உறுப்பினர்கள் சிலரும் முறக்கொட்டாஞ்சேனையில் குண்டர்களுடன் காணப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
அதேவேளை மட்டக்களப்பில் கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்தில் திரண்ட காடையர்கள் தொடர்பில் மட்டக்களப்பிலுள்ள சமூகச் செயற்பாட்டாளர் ஒருவர் கருத்துரைத்துள்ளார்.
எந்தெந்த புலனாய்வாளர்கள் கலந்துகொண்டார்கள், இலங்கை தேசியக் கொடி எந்த இராணுவ முகாமில் இருந்து ஆர்ப்பாட்டத்திற்கா கொண்டுவரப்பட்டன போன்ற பரபரப்புத் தகவல்களையும் அவர் பெயர் விபரங்களுடன் தெரிவித்திருந்தையும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post