இலங்கை மக்கள் வீதிகளில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் மேற்கொண்ட முடிவுகளில் நாங்கள் செல்வாக்குச் செலுத்தவில்லை என்று கூறினார்.
பதுளையில் நடந்த நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை இப்போது உணவு உட்படப் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது என்று சுட்டிக்காட்டிய மைத்திரிபால சிறிசேன எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அரசியல்வாதிகளை நிராகரித்து வெகுஜனப் போராட்டங்களை நாடுகின்றனர் என்று குறிப்பிட்டார்.
13 கட்சிகள் இணைந்து இந்த அரசாங்கம் அமைக்கப்பட்டபோது நானும் தலைவராக நியமிக்கப்பட்டேன் என்று கூறியமைத்திரிபால சிறிசேன, அதன்பின்னர் நான் எதிலும் செல்வாக்குச் செலுத்தவில்லை என்று தெரிவித்தார்.
நான் நாட்டை ஜனநாயக வழியில் வழிநடத்தினேன் என்று தெரிவித்த அவர், உலகநாடுகள் அனைத்தும் எனக்கு உதவின என்றும் கூறினார். ஆனால் ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்ப எதிர்பார்த்தபோதும், அதை என்னால் செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post