கடுமையான பொருளாதார அழுத்தத்துக்குள்ளான மக்கள் மீது அதிக வரிகளைச் சுமத்த வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மக்கள் மீது வரி அல்லது கட்டணச் சுமைகளை சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒடுக்கப்பட்ட மக்கள் மீது எத்தனை புதிய வரிகள் விதிக்கப்பட்டாலும் அவற்றை வசூலிப்பது இலகுவானதல்ல.
இவ்வாறான பிரேரணையை அரசியல் ரீதியாக ஆதரிக்க முடியாது. நாட்டின் உற்பத்திச் செயல்முறையை ஊக்குவிப்பதன் மூலம் வருமானத்தை அதிகரிக்கலாம். ஆனால் அதிக வரிகளையோ கட்டணங்களையோ மக்கள் மீது சுமத்துவது நடைமுறைச் செயல் அல்ல- என்றார்.
மஹிந்த ராஜபக்ச பிரதமராகவும் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவும் இருந்த காலத்தில் நாட்டில் விலைவாசிகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்தன.
எதற்கும் வரிசையே நீடித்தது. இதையடுத்து ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் விளைவாகவே மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post