மக்கள் போராடும்போது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தை ஈடுபடுத்த வேண்டாம். அதற்கான பணியை பொலிஸாரால் முன்னெடுக்க முடியும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சட்டம், ஒழுங்கை பொலிஸாருக்கு நிலைநாட்ட முடியாத சந்தர்ப்பத்திலேயே இராணுவம் அழைக்கப்பட வேண்டும். இலங்கையில் இன்னும் அவ்வாறான நிலைமை ஏற்படவில்லை. எனவே, இராணுவத்தை ஈடுபடுத்த வேண்டாம்.
எமது நாட்டு இராணுவம் அரசமைப்பின் பிரகாரம் செயற்படும் என நம்புகின்றோம். 52 நாட்கள் அரசியல் சூழ்ச்சியின்போது அரசமைப்பின் பிரகாரமே இராணுவம் செயற்பட்டது.
இராணுவம் அரசமைப்பைமீற முற்பட்டால் நெருக்கடி நிலைமை மேலும் உக்கிரமடையும். உலகின் உதவி கிடைக்காது. ” – என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
Discussion about this post