அரசாங்கத்தைப் பதவி விலக் கோரி மக்களால் நடத்தப்பட்டு வரும் தொடர் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் இனி இணைந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி தனியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றபோதும், தற்போது மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் கலந்துகொள்வதற்கும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனுமதியளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தனவுடன் கலந்தாலோசித்து, அமைதியான முறையில் இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்க முடியும் என்று ரணில் விக்கிரமசிங்க கட்சிச் செயற்பாட்டாளர்களுக்கு பணித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post