நாட்டு மக்கள் வாழ்வுக்காக போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை எதிர்பார்க்கின்றார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றினார்.
அதற்குப் பதலளித்து சபாநாயகரின் எதிர்ப்பு மத்தியில் உரையாற்றும்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, சபாநாயகரே மரபை உடைத்து அவரைப்(ரணிலை) பேச அனுமதித்தீர்கள். நியாயமாக இருங்கள்.
தயவுசெய்து எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். எங்கள் வாயை அடைக்க நீங்கள் முயற்சிக்காதீர்கள். பிரதமரின் அறிக்கைக்கு நான் பதில் சொல்ல வேண்டும்.
சபாநாயகரே என்னை வாயடைக்க வராதீர்கள். நீங்கள் கத்துவதைக் கண்டு நான் பயப்படவில்லை. நன்றாக நினைவில் கொள்ளுங்கள். சத்தம் போட்டாலும் பேசும் தைரியம் எனக்கு இருக்கிறது.
பெற்றோல், டீசல் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு தீர்வு எங்கே? தோட்டத் தொழிலாளர்களுக்கு தீர்வு எங்கே? ஏற்றுமதி துறையின் வீழ்ச்சிக்கு என்ன தீர்வு? – என்று கேட்டார்.
Discussion about this post