ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மக்களை மேன்மேலும் வதைக்காமல் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.
இந்த நெருக்கடியான நிலையில் இருந்து இந்த நாட்டை விடுவிப்பதற்கு மிகப் பெரிய தடையாக இருப்பது ராஜபக்ச குடும்பத்தினரே. எனவே, பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை அவர்கள் இழந்துள்ளதால் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. பதவியில் உள்ள ராஜபக்சக்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.
இந்தச் சூழ்நிலையில் இனியும் பதவியில் நீடிக்க அவர்களுக்குத் தார்மீக உரிமை இல்லை. மக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தாமல் ஆட்சி அதிகாரத்தை அவர்கள் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post