நாட்டின் தற்போதைய கொரோனா நெருக்கடியான நிலையில், நாட்டு மக்களை பெரும் தொற்றில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில்
ஒரு வாரமேனும் நாட்டை முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின்
மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
திரிப்படைந்த ஆபத்தான கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால், நாட்டு மக்கள் கடும் சிரமங்களை
எதிர்நோக்கியுள்ளதாக மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே
ஶ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்
வரக்காகொட ஶ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் அனுப்பபட்டுள்ள
கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post