நாட்டின் அடுத்த ஜனாதிபதி பொதுஜன பெரமுனவின் ஊடாகவே தெரிவு செய்யப்படுவார் எனவும் தமது கட்சியே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆசனங்களை கைப்பற்றும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மன்னப்பிட்டியில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் தலைமையில் நாட்டின் அதிகாரத்தை விரைவில் கைப்பற்றுவோம். மகிந்த ராஜபக்சவுக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தயாராக இருக்கின்றனர். போராட்டகாரர்கள் அன்று நாட்டின் பலத்தையும் கலாசாரத்தையும் அழித்தனர். மகிந்த ராஜபக்சவே போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழும் உரிமையை பெற்றுக்கொடுத்தார்.
அது மாத்திரமல்ல, மக்களின் பொருளாதாரத்தை மேன்படுத்தி, நாட்டின் உரிமையை பாதுகாத்து, கல்வி வளர்ச்சிக்கு சேவைகளை செய்த மகிந்த ராஜபக்சவை திருடன் எனக்கூறும் போது, அவருக்கு ஆதரவானவர்களே அதற்கு எதிராக போராடினர்.
மீண்டும், நாட்டையும், நாட்டின் பலத்தையும், எமது எதிர்கால சந்ததியையும் பாதுகாக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. தற்போது காலனித்துவவாதிகளின் டொலர்களுக்கு அடிமையான தலைமுறை உருவாகியுள்ளது.
இவர்கள் ஊடாக சமூக ஊடகங்கள் வழியாக எமக்கு எதிராக சேறுபூசுகின்றனர். கலாசாரத்தை சீர்குலைத்து, சமூகத்தின் பலத்தை சிதைத்து, நாட்டை வீழ்த்த காலனித்துவவாதிகள் முயற்சித்து வருகின்றனர். இதனால், நாங்கள் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.
ஆட்சிக்கு வருவது மிகவும் சவாலுக்குரியது. அதற்காக நாம் மிகப் பெரிய அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post