இலங்கையின் முன்னாள் அதிபர்களான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரண்டு முன்னாள் படை அதிகாரிகளுக்கு தடைவிதித்த கனடா, இரட்டை நிலைப்பாடுகளை கொண்டிருப்பதாக மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கண்டனம் தெரிவித்துள்ளார்.
கனடா மறைக்கப்பட்ட நிகழ்சிநிரல்களுடன் இவ்வாறான நகர்வுகளை எடுப்பதாக குற்றஞ்சாட்டிய அவர், விடுதலைப்புலிகளின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பாக அது இரட்டைநிலைப்பாட்டில் இருப்பதாகவும் விசனம் தெரிவித்துள்ளார் .
மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீது விதிக்கபட்ட தடைகள் அவரது குடும்ப உறுப்பினர்களையும் மறைமுகமாக தீண்டக்கூடியது.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்ச இந்தக் கண்டனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post