புதிய இணைப்பு
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அதன் போது, இந்தியா – இலங்கை இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் தற்போதைய முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரமதாசவை சந்தித்துள்ளார்.
குறித்த விடயம் இந்திய வெளிவிவகார அமைச்சரின் எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
முன்றாம் இணைப்பு
இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பிற்பகல் பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதனை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இலங்கையின் அபிவிருத்திக்கான இந்தியாவின் ஆதரவு தொடரும் என அவர் உறுதியளித்துள்ளார்.
எமது அபிவிருத்தி உதவிகள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் இலங்கை மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ற வகையில் தொடர்ந்து வழங்கப்படும் என்பதில் நம்பிக்கை உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரணிலை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர்
இரண்டாம் இணைப்பு
இலங்கையை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
அதிபர் மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்ற நிலையில், தற்போது சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய தரப்பினரை ஜெய்ஷங்கர் சந்தித்து வருகிறார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு சிறிலங்காவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் கிழக்கு மாகாண ஆளுந செந்தில் தொண்டமான் ஆகியோரால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு பயணமாக இலங்கைக்கான பயணம் அமைந்துள்ளது.
முதலாம் இணைப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (S.Jaishankar) நாளை (20) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி
மேலும், இந்த விஜயத்தின் போது இலங்கையில் இந்திய முதலீடுகள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post