மகாசங்கடஹர சதுர்த்தியான இன்று (22) வியாழக்கிழமை வருகின்றது. இந்த நாளில் விநாயகரின் மனம் மகிழும் படி வழிபட்டால் நம்முடைய பிரச்சனைகளான கடன், நோய், அவமானம், பணத்தை கடனாக கொடுத்து ஏமாறுவது, அவமானம், எதிரிகள் தொல்லை, தோல்விகள் ஏற்படுதல் ஆகிய பிரச்சனைகள் நீங்கும்.மகாசங்கடஹர சதுர்த்தியில் எவ்வாறு வழிபட வேண்டும் என நாம் இங்கு பார்ப்போம்.கடன் தீர வழிபாடு முறைமகாங்கடஹர சதுர்த்தியான இன்று ஏதாவது விநாயகர் கோவிலுக்கு சென்று, நம்முடைய கர்மவினைகள் குறைவதற்காக விநாயகப் பெருமானுக்கு கஸ்தூரி மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வழிபடலாம். முடிந்தவர்கள் சந்தனக் காப்பும் சாற்றி வழிபடலாம்.இந்த வழிபாட்டினை கோவிலில் மட்டுமே செய்ய வேண்டும். பிறகு வீட்டில் இருந்து 108 என்ற எண்ணிக்கையில் நம்முடைய கைகளால் செய்து கொழுக்கட்டை மற்றும் லட்டு செய்து எடுத்துச் சென்று, அங்கு வருபவர்களுக்கு கொடுக்க வேண்டும். இப்படி கொடுப்பதால் எவ்வளவு கடன் இருந்தாலும் அது நீங்குவதற்கு விநாயகப் பெருமான் வழி செய்வார். நம்முடைய துன்பங்கள் அனைத்தும் தீரும்.நோய்கள் தீர விநாயகர் வழிபாடுஇதே போல் 108 கொழுக்கட்டை, 108 லட்டு செய்து கொடுப்பதுடன், சுத்தமான நாட்டு தேன் வாங்கிச் சென்று விநாயகருக்கு அபிஷேகம் செய்யலாம். மஹாசங்கடஹர சதுர்த்தி அன்று இந்த தேனால் அபிஷேகம் செய்து, அந்த அபிஷேக தேனை வாங்கி வந்து வீட்டில் வைக்க வேண்டும்.தினமும் காலையில் விநாயகரை வேண்டி, இந்த தேனை ஒரு ஸ்பூன் குடித்து வந்தால் தீராத நோய்கள் தீரும். மருத்துவ செலவுகள் குறையும். கொழுக்கட்டை, லட்டு செய்து விநாயகருக்கு படைத்து விட்டு மற்றவர்களுக்கு கொடுக்கும் போது வியாபாரம் பெருக, கொடுத்த பணம் திரும்ப கிடைக்க, அவமானம் நீங்க 48 நாட்களில் நல்ல வழி பிறக்கும்.மஹாசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் முயற்சிகளில் தோல்வி, முன்னேற்றம் இல்லை என்பவர்களும் விநாயகருக்கு அபிஷேகம் செய்து, இந்த இனிப்பு பிரசாதங்களை மற்றவர்களுக்கு விநியோகம் செய்வதால் நம்முடைய ஜாதகத்தில் ராகு பலம் பெற்று, பொருளாதாரத்தில் ஏற்றத்தை கொடுப்பார்.இதனால் பணம் வருவதில் இருக்கும் தடைகளும் நீங்கும், அனைத்து விதமான துன்பங்களும் விலகும். மகா சங்கடஹர சதுர்த்தி அன்று மாலையில் இந்த வழிபாட்டினை செய்வது மிகவும் விசேஷமானதாகும்
Discussion about this post