Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

மகனை காணாமல் தவிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்

December 27, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
மகனை காணாமல் தவிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தனது மகனை கடந்த ஓராண்டுக்கும் மேலாக காணாமல் தவிப்பதாக இந்திய கிரிக்கெட்வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுக்கு உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆயிஷா முகர்ஜி என்பவரை தவான் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஜோரவர் உள்பட 3 குழந்தைகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு ஷிகர் தவானை அவருடைய மனைவி விவாகரத்து செய்துவிட்டு, மகன்களுடன் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து விட்டார்.

எனினும் தவான், தனது மகனை தனக்கு காட்டவேண்டுமென இந்திய நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவரது மனைவிக்கு,நீதிமன்றம் மகனை மூன்று மாதத்திற்கொருமுறை காட்டுமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் ஷிகர் தவான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், “உன்னை நேரில் பார்த்து ஒரு ஆண்டை கடந்து விட்டது. சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பு கொண்டும் 3 மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் கடந்த வருடம் பிறந்தநாளின்போது உன்னுடன் காணொளி மூலம் பேசிய பதிவுடன், என் மகனே உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

உன்னை அதிகமாக அப்பா நேசிக்கின்றேன். கடவுள் கிருபையால் அடுத்த முறை உன்னை நேரில் சந்திக்கும் வரை நான் மனத்திடத்துடன் இருப்பேன். உன்னை குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன். உன்னை மிக அதிகமாக நேசிக்கிறேன் ஜோரவர்” என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு ரசிகர்களையும், இணையவாசிகளையும் கண்கலங்க வைத்துள்ளது. ஷிகர் தவானுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு இந்த பதிவை வைரலாக்கி வருகிறார்கள்.

Tags: #Heartwarming#Shikhar Dhawan#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

கனடாவில் காசா போரை எதிர்த்து போராடியவர்களுக்கு நேர்ந்த நிலை!

Next Post

கனடாவில் வழமைக்கு மாறான வானிலை

Next Post
கனடாவில் வழமைக்கு மாறான வானிலை

கனடாவில் வழமைக்கு மாறான வானிலை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.