Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞன் கைது..!

December 11, 2023
in இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞன் கைது..!
0
SHARES
Share on FacebookShare on Twitter

போலி கனேடிய கடவுச்சீட்டுடன் கனடாவுக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரை இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் நேற்று(10) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 217 இல் தோஹா செல்வதற்காக அனுமதி பெற வந்தபோது, ​​அந்த இளைஞனின் கடவுச்சீட்டில் சந்தேகம் ஏற்பட்டதால்அவர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து, சோதனையின் போது, அவரது இலங்கை கடவுச்சீட்டு மற்றும் மாலைதீவுக்கான போலியான விமான பயணச்சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பின்னர் விசாரணைகளின் போது, விமான நிலையத்திற்கு அருகாமையில் போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் ஒருவருக்கு 40 லட்சம் ரூபா செலுத்தி அவர் போலி கனேடிய போலி கடவுச்சீட்டை பெற்றுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் பருத்திதுறையை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: #Arrested#Canadian#Investigation#Passport#police#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

தர்ஷா குப்தாவின் அழகிய போட்டோஷூட்

Next Post

மகனின் அடகு கடையில் கொள்ளையிட்ட தாய்

Next Post
மகனின் அடகு கடையில் கொள்ளையிட்ட தாய்

மகனின் அடகு கடையில் கொள்ளையிட்ட தாய்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.