கடும் பனிப்பொழிவு காரணமாக உக்ரைனின் ஒன்பது பிராந்தியங்களில் சுமார் 1000 நகரங்கள் மற்றும் கிராமங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்களால் மின்சக்தி அமைப்பு பலவீனமடைந்துள்ளதாகவும், இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் குடியிருப்பாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனின் வெப்பநிலை சுமார் -15 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளதால், இந்த வாரத்தில் மின்சார நுகர்வு மிக அதிகமாக இருந்ததுடன், அது 5.8 வீத அதிகரிப்பாயிருந்தது.
இதேபோன்று கடந்த ஆண்டும் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காலப்பகுதியில் ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய அண்டை நாடுகளிடமிருந்து உக்ரைன் மின் தேவையை பூர்த்தி செய்தது.
உக்ரைனின் மின் அமைப்பை ரஷ்யாவின் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கின.
இதன்காரணமாக பல மில்லியன் மக்கள் இருளில் மூழ்கினர். அதேபோல் இம்முறையும் கடும் பனிப்பொழிவு, பலத்த காற்றினால் 1,025 குடியிருப்பு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
கடும் பனிபொழிவு மற்றும் ரஷ்ய தாக்குதல்களால் மின் விநியோகத்திற்கான உடன் நடவடிக்கையினை மேற்கொள்ள தாமதமடைவதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
Discussion about this post