சர்வதேச சிறுவர் தினம் நேற்றுக் கொண்டாடப்பட்ட நிலையில், போரில் இறந்த மாணவர்களை நினைவுகூர்ந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று குருதிக் கொடை வழங்கப்பட்டது.

கிளிநொச்சி மகா வித்தியாலய 2015ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களின் “எழுகை” அமையத்தின் ஏற்பாட்டில் இந்தக் குருதிக் கொடை முகாம் நடைபெற்றது.

அதேவேளை, சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் நடத்தப்பட்டது. ஈழத்து இலக்கிய மூத்த படைப்பாளி யோகேந்திரநாதன், குரு கணினி மையத்தின் உரிமையாளர் குருபரன், திருமதி தெய்வேந்திரமூர்த்தி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
Discussion about this post