அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சேகரிக்க ஆரம்பித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கண்டிப்பான உத்தரவின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் தெரியவருகின்றது.
அரச கட்டடங்களை ஆக்கிரமித்தவர்கள், அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் போன்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்று கூறப்படுகின்றது.
இந்தப் போராட்டங்களை ஆதரித்த சட்டதரணிகள் சங்கம் உள்ளிட்ட எந்த ஒரு சிவில் அமைப்புக்கள் தலையிடா முடியாதவாறான சட்டக் கட்டமைப்புக்குள்ளேயே சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post