ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலக வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டததை இரண்டாக பிளவுப்படுத்த அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி 10 கோடி ரூபா பணத்தை ஒதுக்கியுள்ளார் என்று பிரபல நடிகை யுரேனி நோஷிகா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நிசங்க சேனாதிபதியின் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ரோஹித்த ராஜபக்ச மற்றும் பாடகர் இராஜ் ஆகிய தரப்பினரே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கோ ஹோம் கோத்தா போராட்டத்தை இரண்டாக பிளவுப்படுத்த நிஷ்சங்க சேனாதிபதி 10 கோடி ரூபா ஒதுக்கியுள்ளார். இராஜ் மற்றும் ரோஹித்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் இதை நடைமுறைப்படுத்துகின்றனர்.
5 ஆயிரம் முகநூல் பக்கங்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு பதிவுக்கு 10 ஆயிரம் ரூபா செலுத்தப்படுகிறது.
அந்தப் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட வேண்டாம். அறிக்கை ஒன்றை செய்து விட்டு சும்மா இருங்கள். அனைவருக்கும் இது பற்றி தெளிவுப்படுத்துவோம். எமது போராட்டம் #ஹோ கோம் கோத்தா என்று பதிவிட்டுள்ளார்.
Discussion about this post