கொழும்பு, காலிமுகத் திடலில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக ஊடகங்கள் முன்பாகக் கருத்துத் தெரிவித்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியுள்ளது.
சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் திணைக்களமும் அறிவித்திருந்தது.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். பொலிஸ் உத்தியோகத்தருக்காக 12 சட்டத்தரணிகள் கட்டணம் இன்றி நீதிமன்றில் தோன்றியிருந்தனர்.
ஒருவர் தனது மன வருத்தத்தைப் பதிவு செய்வது குற்றம் அல்ல என்று சட்டத்தரணிகள் நீதிமன்றில் வாதத்தை முன்வைத்தனர். வாதப் பிரதிவாதங்களை செவிமடுத்த நீதிமன்று, பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை வழங்க உத்தரவிட்டது.
Discussion about this post