கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது பொலிஸ் அதிகாரிகள் அநாகரிக முறையில் நடந்துகொண்டனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரன் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது தாம் உட்பட பல பெண்கள் பொலிஸாரால் துன்புறுத்தப்பட்டனர். பொதுவாக போராட்டங்களின்போது சில தள்ளுமுள்ளு இடம்பெறும். அவர்கள் தற்செயலாக ஒருவரையொருவர் மோதிக்கொள்வர்.
ஆனால் குறித்த போராட்டத்தின்போது எம்முடன் போராடிய பெண்கள் மீது பொலிஸார் தகாத வார்த்தைகளை பிரயோகித்து அநாகரிகமாக நடந்துகொண்டனர். இதற்கான ஆதாரங்கள் என்னிடமிமுள்ளது என குறித்த முறைப்பாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post