யாழ்ப்பாணம், உரும்பிராயில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த இளைஞர் அதிகளவு போதை மருந்தை உட்செலுத்தியதால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
உரும்பிராய் சிவன் வீதியில் உள்ள வாழைத் தோட்டத்திலேயே இளைஞனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இளைஞர் இணுவிலைச் சேர்ந்தவர் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த இளைஞர் போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றிக் கொண்டபோது உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
இளைஞரின் உடல் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post