போதைப்பொருள் பயன்படுத்தும் மூத்த சகோதரன் உடன் பிறந்த தன் சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய அதிர்ச்சி சம்பவமொன்று யாழ் சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய தங்கை விரக்தியுற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உள்படுத்தியதனால் மனவிரக்திக்கு உள்ளாகிய இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
விரக்தியடைந்த சகோதரி தபக்கு நடந்த விபரீதத்தை ஒலிப்பதிவு செய்து த நண்பி ஒருவருக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.
போதைப்பொருள் பயன்படுத்தும் மூத்த சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலத்தில் அவர் இக்குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேற்கிலிருந்து இப்போது வடக்கு, கிழக்கு முழுவதும் ஹெரோயின் உள்ளிட்ட உயிர்க்கொல்லி போதைப்பொருள் பாவனை இளவயதினர் இடையே அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post