போதைப் பாக்குடன் ஆசிரியரிடம் சிக்கிக் கொண்டதை அடுத்து மாணவன் ஒருவர் கையை பிளேட்டால் அறுத்துக் கொண்டுள்ளார். தற்போது இந்த மாணவன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் நடந்துள்ளது.
ஆசிரியர் சாதாரண தரத்தில் கற்கும் மாணவன் ஒருவரின் புத்தகப் பையில் இருந்து போதைப் பாக்குப் பையை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அதையடுத்து இது தொடர்பாக அதிபருக்கு அறிவிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தநிலையில் மாணவன் திடீரெனத் தனது கையை பிளேட்டால் வெட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Discussion about this post