போதைப் பொருள் பாவனைக்கு அடிமையான தனது மகனைத் தாய் ஒருவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
தனது மகனைத் திருத்தித் தர வேண்டும் என்று கோரியே தாய் கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் மகனை ஒப்படைத்துள்ளார்.
யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் ஒருவனே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் குடாநாட்டில் தற்போது ஹெரோய்ன் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. பதின்ம வயதுடைய பலர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
Discussion about this post