வாய் பேச முடியாத 24 வயதுத் தாய், 4 வயதுக் குழந்தையுடன் போதைக்கு அடிமையான கணவனால் 4 நாள்களுக்கு முன்னர் அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும், அதன்பின்னர் அவர்களைப் பற்றிய தகவல் இல்லை என்றும் குழந்தையின் பேர்த்தி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஊர்காவற்றுறை – கரம்பொன் மேற்கை சேர்ந்த சிவச்சந்திரன் நிறோஜினி வாய்பேச முடியாதவர். சுருவிலை சேர்ந்த நந்தகுமார் சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு மதுமிதா என்ற 4 வயது மகள் உண்டு.
சிவச்சந்திரன் போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகின்றது. கணவனை பிரிந்து இருந்த நிறோஜினி ஒரு மாதத்துக்கு முன்னரே கணவனால் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார் எனக் கூறப்படுகின்றது.
தற்போது அவர் உயிரிழந்துவிட்டார் என்றும், அவரது குழந்தை கொடும் சித்திரவதைக்கு உள்ளாகின்றது என்றும் படங்களும் காணொளிகளும் வெளியாகி உள்ளன. ஆனால், இவை எங்கே இடம்பெற்றன என்ற விவரங்கள் தெரியவரவில்லை.
இது தொடர்பாக இன்று பகல் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதிவானின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு நீதிவான் பொலிஸாரைப் பணித்துள்ளார்.
இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ கிராம சேவையாளர்களுக்கோ தகவல்களைக் கொடுத்து இக்குழந்தையை மீட்க உதவுங்கள்.
Discussion about this post