ஒன்றரை மாதத்துக்குத் தேவையான போதியளவு எரிபொருள் கையிருப்பிலுள்ளது. இதனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் இல்லை என பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் நாட்டுக்கு வருகைந்துள்ள கப்பலிலிருந்து இறக்கப்பட்டுள்ள சுமார் 40 ஆயிரம் மெற்றிக் தொன் எடையுடைய டீசலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. அத்துடன் இந்தியன் ஒயில் நிறுவனமும் எரிபொருள் விநியோக இறக்குமதி செய்து வருகிறது.
எனவே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
Discussion about this post