போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் மட்டக்களப்பு கிளை தற்போது மட்டக்களப்பு நகர் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவக பொறுப்பதிகாரி தர்மலிங்கம் ஹரிதேவா தெரிவித்துள்ளார்.
கடந்த 6 வருட காலமாக மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கல்லடி பகுதியில் சாரதிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களை வழங்கும் சேவையினை வழங்கி வந்த தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் தற்போது மட்டக்களப்பு பார் வீதியில் திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் அதிநவீன வசதியுடனான கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த கட்டிடத்தில் சாரதி மருத்துவ சான்றிதழ் வழங்கும் சேவையினை பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவக பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் சாரதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை இலகுபடுத்தும் வகையிலும், இடப்பற்றாக்குறை காரணமாக ஏற்படுகின்ற அசௌகரியங்களை குறைக்கும் வகையிலும் குறித்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post