வென்னப்புவ பிரதேசத்தில் வசிக்கும் கோடீஸ்வர இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் அவரது நண்பருடன் ஹோட்டலில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் இரண்டு அதிகாரிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீதுவ பொலிஸ் அதிகாரிகள் மெற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் வாகரை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கொனஹேன முகாமில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் சாரதி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள்
ஏனைய சந்தேக நபர்கள் கண்டி கேகாலை மற்றும் தியத்தலாவ பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் கம்பஹாவில் வசிப்பவர் எனவும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் அவரது வீட்டில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்களாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இருந்து ஐம்பது இலட்சத்திற்கும் அதிகமான ரூபாவும் மீட்கப்பட்டுள்ளதாகவும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வான்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் இரண்டு சீருடைகள் மற்றும் கைவிலங்குகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post