எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபர் ஒருவரை பெயரிடுவார் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசன சபையை எந்த நேரத்திலும் சபாநாயகரினால் கூட்ட முடியும் எனவும் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுமதி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்படி விரைவில் நாட்டில் பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடம் நிரப்பப்படும் என தெரிய வருகிறது.
பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சீ.டி விக்ரமரட்ன பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டது முதல் அந்தப் பதவிக்கான வெற்றிடம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post