பொலிஸ்மாஅதிபர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இருவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டவாட்சியை உறுதிப்படுத்த முடியாமற்போனமை தொடர்பில் அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post