பொலிஸாருக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை அவர்கள் சட்ட ரீதியாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செயற்படும் அனைவரது பாதுகாப்பையும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் உறுதிப்படுத்துவேன் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் பொலிஸ் அதிகாரிகளுடன் நடந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடும்போது எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் உரிய நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியாத பெருமு் நெருக்கடிகள் ஏற்படும்போது முப்படையினரின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post