இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் தொழில்
முறைகளினால் ஏற்படுகின்ற பாதிப்புக்களில் இருந்த தங்களை பாதுகாப்பதற்கு
இலங்கை அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும்
பொறுமையின் எல்லையில் இருப்பதாகவும் வடக்கு கடற்றொழிலாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
மேலும், இலங்கை அரசாங்கத்தின் அசமந்தப் போக்கினைக் கண்டித்துள்ள வடக்கு
கடற்றொழிலாளர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதிருந்த
நம்பிக்கையினையும் இழந்துள்ளதாக தெரிவித்திருப்பதுடன், தமது கடல்
வளத்தினையும் வாழ்வாதாரத்தினையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post