இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் பின்னடைவு மிக்கனவாகவே காணப்படுகின்றன என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நேற்று இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதில் தனது எழுத்துமூலமான அறிக்கையை வெளியிட்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாத கலாசாரம் நீடித்துக் கொண்டிருக்கின்றது. அதைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வன்முறைகள் இடம்பெறாதவகையில் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவது தொடர்பில் உணரக்கூடிய வகையிலான செயற்பாடுகள் இடம்பெறாத நிலைமை நீடித்துக் கொண்டிருக்கின்றது என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post