இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு சில வாரங்கள் கடந்துள்ள போதும், அவர்களில் பலர் தமது கடமைகள் என்ன என்பதை இன்னும் அறியாமல் இருக்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
நீர்ப்பாசன அமைச்சு இராஜாங்க அமைச்சரின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் வெள்ளம் மற்றும் வடிகால்களை வெள்ளக்கட்டுப்பாட்டு திட்டங்களின் மூலம் கட்டுப்படுத்தல், ஆறுகள், கால்வாய்கள் மற்றும் குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்தல் மற்றும் கடல் நீரை அகற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆயினும் துறைமுகங்கள், கடற்படை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இராஜாங்க அமைச்சருக்கு நாட்டில் உள்ள மூன்று உள்நாட்டு விமான நிலையங்களை நிர்வகித்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, தமக்கு பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தியிருந்தார்.
Discussion about this post