நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு நிலையான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.
பிரச்சினைகளுக்குத் தீர்வாக குறுகிய நோக்கத்துடன் தீர்மானங்களை எடுப்பது நாட்டின் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கத்தில் பதவி ஏற்று நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று கட்சியின் ஆதரவாளர்கள் பலர் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் குறுகிய காலத் தீர்வுகள் மூலம் பெரும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.
பல தசாப்தங்களாக ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மக்களை யாரும் வந்து காப்பாற்றப் போவதில்லை. அரசியல்வாதிகளின் பொய் பரப்புரைகளில் சிக்கிக் கொள்ளாமல் பொறுப்புள்ள கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.- என்றார்.
Discussion about this post