நாட்டில் தற்போது இருப்பது பொருளாதாரப் பிரச்சினைகளே. அவற்றுக்கு நாம் தீர்வு வழங்குவோம். பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்ததும் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து விடும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுடன் நேற்றிரவு தொலைபேசி ஊடாக நடந்த உரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசமைப்புத் தீர்வு என்பது பெரிய விடயமல்ல என்று தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ச, அதுபற்றி அவசரப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
20ஆவது திருத்தத்தை அகற்றி 19ஆம் திருத்தத்தை மீண்டும் கொண்டுவர முயன்றமை உண்மைதான் என்று தெரிவித்த மஹிந்த ராஜபக்ச, அதற்குமேல் அதற்கு என்ன நடந்தது என்று தெரியாது என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் அமைச்சரவை பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Discussion about this post