இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வை முன்வைப்பதற்கான பொருளாதார வரைவு ஒன்று எதிர்வரும் நாள்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
குறுகிய கால மற்றும் நடுத்தர கால இலக்குகளை அடைய அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று கூட்டத்தில் கலந்து கொண்ட நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன சுட்டிக்காட்டினார்.
இந்தக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டன.
Discussion about this post