எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை நுகர்வோர் அதிகாரசபை (Consumer Affairs Authority) தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்துள்ளார்.
எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்காத வர்த்தகர்களை கண்டுபிடிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசேட அவதானத்துடன் சோதனை
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட விலைகள் தொடர்பில் விசேட அவதானத்துடன் சோதனைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 90 அலகுகளை விடவும் குறைவாக பாவனை செய்யும் பொது மக்களுக்கே மின் கட்டண குறைப்புச் சலுகைகள் அதிகமான கிடைக்கும் என்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post