துறைமுக நகரின் களஞ்சியம் ஒன்று உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் திருடப்பட்டுள்ளன என்று பொய்யான முறைப்பாடு அளித்தார் என்று கூறப்படும் துறைமுக நகரின் கொள்முதல் அதிகாரியான சீன பிரஜை லி சி ஹூ என்பவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உண்மையான தகவல்களை மறைத்து, பொய்யான தகவல்களை முன் வைத்து , பொய் முறைப்பாட்டை வழங்கினார் என்று துறைமுகப் பொலிஸார் இந்தச் சீன நாட்டவருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விடயங்களை முன் வைத்தனர்.
அதையடுத்து சைனா ஹாபர் நிறுவனம், கிழக்கு கோபுரம், உலக வர்த்தக மையம் , கொழும்பு 1 எனும் முகவரியைக் கொண்ட துறைமுக நகரத்தின் கொள்முதல் அதிகாரியான லி சு ஹூ என்பவரை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.
துறைமுக நகரின் களஞ்சியம் ஒன்று உடைக்கப்பட்டு, அதனுள் இருந்த செப்புக் கம்பிகள் போன்ற பொருள்கள் திருடப்பட்டுள்ளன என்று இந்தக் கொள்முதல் அதிகாரி துறைமுக பொலிஸாருக்கு அண்மையில் முறைப்பாடுச் செய்திருந்தார்.
பொலிஸாரின் விசாரணையில் அங்கிருந்த பொருள்கள் திருடப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதையடுத்தே கொள்முதல் அதிகாரிக்கு எதிராகப் பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post