யாழ்ப்பாணம், பொன்னாலை மேற்கில் ஒன்றரை வயதுக் பெண் குழந்தை ஒன்று தண்ணீர் வாளிக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது.
தாயார் இன்று மதியம் சமையலில் ஈடுபட்டிருந்த போது, வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீர் வாளிக்குள் தவறி வீழ்ந்துள்ளது.
குழந்தையைக் காணாது தாயாரும், அயலவர்களும் தேடியபோது, குழந்தை தண்ணீர் வாளிக்குள் வீழ்ந்திருந்தமை கண்டுபிடிக்கப்ட்டது.
குழந்தையை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும், குழுந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என்று மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
Discussion about this post