உதயமாகியுள்ள 2024 ஆம் ஆண்டில் 25 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் மூலம் இத்தகவல் வெளியிட்டுள்ளது.
04 நாட்கள் விடுமுறையோடு அதிகபட்ச விடுமுறைகளை கொண்ட மாதமாக ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ஜனவரி மாதத்தில் 15 மற்றும் 25ஆம் திகதிகள், பிப்ரவரி மாதத்தில் 04 மற்றும் 23ஆம் திகதிகள், மார்ச் மாதத்தில் 08, 24 மற்றும் 29ஆம் திகதிகள், ஏப்ரல் மாதத்தில் 11, 12, 13மற்றும் 23ஆம் திகதிகள், மே மாதத்தில் 01, 23 மற்றும் 24ஆம் திகதிகள், ஜூன் மாதத்தில் 17மற்றும் 21ஆம் திகதிகள், ஜூலை மாதத்தில் 20ஆம் திகதி, ஆகஸ்ட் மாதத்தில் 19ஆம் திகதி, செப்டம்பர் மாதத்தில் 16 மற்றும்17ஆம் திகதிகள், அக்டோபர் 31ஆம் திகதி, நவம்பர் 15ஆம் திகதி, டிசம்பர் 14 மற்றும் 25ஆம் திகதிகள் என்பன பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Discussion about this post