ரம்புக்கனையில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு 3 இராஜாங்க அமைச்சர்களே உத்தரவிட்டுள்ளனர் என்று பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார.
நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்தபோது இதனைக் கூறிய ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, இதை பொறுப்புடன் தெரிவிக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.
ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 90 ரவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த அவர், சம்பவம் நடைபெற்ற தினத்துக்கு முதல்நாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தலைமையிலான கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபடுவர்களைக் கைது செய்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது என்று கூறினார்.
அவ்வாறு இருக்க எவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பிய நளின் பண்டா, துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அவருக்கு அந்த உத்தரவை வழங்கக் கோரியது பொலிஸ் மா அதிபரோ அல்லது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களோ அல்லர் என்று தெரிவித்த அவர், ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மூவரே கூறினர் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post